- வலைப் பதிவு _ முனைவர் திரு. கி. குமார்
இந்தியா முழுவதும் ஹோலி
மிகவும் ஆடம்பரமாகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
இது இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான பண்டிகைகளில் ஒன்றாகும்.
ஹோலி வண்ணங்களின் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.
நாம் ஏன் ஹோலி
கொண்டாடுகிறோம் நினைத்துப் பாருங்கள், நம்
நினைவுக்கு வருவது வண்ணங்கள், வேடிக்கைகள், பொழுதுபோக்குகள், பாடல்கள் மற்றும் பல வடிவ பறை அல்லது முரச மேளம் கொட்டுதல்.
ஹோலியின் ஸாராம்சம் தீமையை
அழித்து நன்மையைக் கொண்டாடுவதாகும். மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே
ஹோலி பண்டிகையின் ஒரு முக்கிய நோக்கம்.
2023ல் மார்ச் மாதம் 8ம்
நாள் ஹோலி கொண்டாடப்படுகிறது.
பால்குனி மாதம் பௌர்ணமி
நாளில் வரும் இது ஒரு 2-நாள்
திருவிழாவாகும், ஹோலிகா
தஹன் என்று ஹோலிக்கு முந்தைய மாலை இரவில் கொண்டாடப்படும்.
ஊரின் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு கூடி, நெருப்பு மூட்டி அதன் முன்னால் நின்று எப்படி அசுர மன்னன்
ஹிரண்யகசிபுவின் சகோதரி ஹோலிகா தீயில் கொல்லப்பட்டது போல, அனைவரின் உள்ளிருக்கும் தீய எண்ணங்கள் சுட்டு அழிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை
செய்கிறார்கள். இது சோட்டி (சிறிய) ஹோலி என்று அழைக்கப் படுகிறது.
இதை ஒட்டிய கதை:
அரக்கன் இரண்யகசிபு பொல்லாதவன். தன் அகங்காரத்தால்
தன்னைக் கடவுளாகவே நினைக்க தொடங்கினான். எல்லோரும் அவரை அப்படி எண்ண வேண்டும்
என்று அவர் விரும்பினார்.
ஆனால், அவருடைய சொந்த மகன் பிரகலாதன், பகவான் விஷ்ணுவின் மீது நமது பக்தியே தலை சிறந்தது என்று பறைசாற்றவே, ஒரு வகையான தண்டனையாக அவரை நெருப்பில் எரிக்க உத்தரவிட்டார்.
நெருப்புக் கூட அவளை
எரிக்க முடியாத தன் தங்கை ஹோலிகாவை, பிரகலாதனை மடியில் வைத்துக் கொண்டு தீக்குள் புகுமாறு கட்டளையிட்டான். தீயில் எரிந்து ஹோலிகா சாம்பலானாள். ஆனால்
பிரகலாதனோ, சிரித்துக்
கொண்டு அமர்ந்திருந்தான். இந்நாளே ஹோலி பண்டிகை ஆரம்பமாக கொண்டாடப்படுவதாக
சொல்லப்படுகிறது.
இது கடவுள் கிருஷ்ணரின் நிலைத்த
தெய்வீக அன்பை ராதா கிருஷ்ணா உறவின்
வடிவில் கொண்டாடுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
பீஹார் மாநிலத்தில் கிருஷ்ணன்
அவதரித்து வளர்ந்த பிரஜ் பிரதேசத்தில் இப்படி ஒரு கதை உண்டு:
தான் கரு நீல வண்ணத்தில்
இருக்கிறோமே அழகிய ராதா தன்னுடன் விரும்பி ஆடுவாளோ என்று கவலையை போக்க, தாய் யசோதா
ராதையை கண்ணன் மற்றும் அனைவரது முகத்திலும் உடம்பிலும் ஆடையிலும், வண்ண வண்ண பொடிகளைத்
தூவிக் கொண்டு ஆடிப்பாடி மகிழுங்கள் என்று கூறியதாகவும் அன்றிலிருந்து ஒவ்வொரு
வருடமும் இது ஒரு மகிழ்ச்சி மிக்க விழாவாக கொண்டாடப்படுகிறது.
ஹோலியைப் பற்றிய
இன்னுமொரு செய்தி:
தீவிர யோகத்திலே
பல்லாண்டு இருந்த சிவனை மீண்டும், உலகிற்கு கொண்டு வர விரும்பும்
பார்வதி தேவி, வசந்த பஞ்சமி அன்று காமதேவன் மற்றும் மன்மதன் என்கிற இந்து காதல் கடவுளிடம் உதவி
கேட்கிறார். காதல் கடவுள் சிவனின் தவத்தைக் கலைக்க சிவன் மீது மலர் அம்புகளை
எய்கிறார்,
வெகுண்ட சிவபெருமான்
தனது மூன்றாவது கண்ணைத் திறந்து காமனை (மன்மதனை) எரித்து சாம்பலாக்குகிறார். இது
மன்மதனின் மனைவி ரதி மற்றும் பார்வதி தேவி
இருவரையும் வருத்தப்படுத்துகிறது. ரதி நாற்பது நாட்கள் சிவன் அருள் வேண்டி தியானம்
செய்கிறாள். அதை சிவன் இரக்கத்தால்
மன்னித்து, அன்பின் காதலின் கடவுளை உயிர்ப்பிக்கிறார். இதுவே வசந்த
பஞ்சமி பண்டிகையின் 40வது நாளில் ஹோலியாக, காமன்
பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது என்றும் ஒரு புராணக் கதை உண்டு. தமிழ் நாட்டில்
தஞ்சாவூர், கோவை மற்றும் பல பிராந்தியங்களில் காமன் பண்டிகை
கொண்டாடுகிறார்கள்.
முதல் நாள் மாலையில்
ஆரம்பித்த கேளிக்கை ஆட்டம் பாட்டம் இரவு முழுவதும் தொடர்கிறது. ஹோலி பண்டிகை (ஹோலி
ரங்கவல்லி) தினத்தில் வர்ணப் பொடிகளைத் தூவி, இனிப்புகளை பரிமாறி ஆண்களும் பெண்களும் ஊர்மக்கள் அனைவரும் சிநேக பாவத்துடன் கொண்டாடப்படுகின்றது.
மறு நாள் காலையில்
ஒருவருக்கு ஒருவர் வர்ணம் பூசிக் கொள்வது, பிச்காரி என்று சொல்லும் நீர் குழாய்களில் இருந்து வண்ணக்
கலவை நீரை ஒவ்வொருவர் மீதும் தெளிப்பது போன்ற விளையாட்டுக்கள் தொடர்கின்றன. மதியம்
நண்பர்கள் உறவினர் அனைவரும் கூடி இனிப்புகளுடன் உணவு அருந்தி மகிழ்கிறார்கள்.
மேலும் இது ஒரு நல்ல
அறுவடைக்கும், வசந்த காலத்தையும் குறித்த நன்றியையும் தெரிவிக்கிறது. பெரும்பாலும்
இந்துக்களால் மத பேதம் இன்றி கொண்டாடப்படுகிறது. ஒருவருக்கொருவர் பிரகாசமான வண்ணப்
பொடி மற்றும் வண்ண நீர் இறைத்துக்கொண்டு விளையாட்டு போல கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக எல்லா வட
மாநிலங்களிலும் மிக விமரிசையாக கோலாகலமாக இந்த விழா கொண்டாடப்படுகின்றது.
சமீப காலங்களில் தென்
மாநிலங்களிலும் மிக கோலாகலமாக இந்த விழா இளைஞர்கள்
இடையே கொண்டாடப்படுகின்றது.
இத்தனை மகிழ்ச்சி வாய்ந்த ஹோலி கொண்டாட்டதின்போது உங்கள் அனைவருக்கும் சைக்கிள் பியூர் நிறுவனத்தின் நல்வாழ்த்துக்கள்.
Holi Special Recipe - How to make Gujiya at home?
