வலைப்பதிவு – அளிப்பது முனைவர் கி. குமார்
சிவராத்திரி என்பதற்கு “சிவனுக்கு உகந்த இரவு” என்பது பொருள்.
சிவனுக்குரிய தினங்களில் மிகவும் சிறப்புக்குரியது மஹா சிவராத்திரி வழிபாடு. மஹா சிவராத்திரி இரவில் உலகிலுள்ள எல்லாக் கோயில்களில் உள்ள லிங்கங்களிலும் சிவன் தோன்றுகிறார் என்பது ஐதீகம்.
மஹா சிவராத்திரி – விரதம் மற்றும் பூஜை செய்வது எப்படி?
இந்த சிவராத்திரி விரதத்தினை முறைப்படிக் கடைப்பிடிக்க வேண்டும். விரதமிருப்போர், முதல் நாள் ஒரு பொழுது மட்டுமே உணவருந்த வேண்டும்.
மஹா சிவராத்திரியன்று அதிகாலையில் குளித்து, திருநீறு அணிந்து, பூஜை இடத்தை சுத்தம் செய்யவேண்டும்
பூஜைக்கு தேவையான அனைத்து பூஜை பொருட்களையும் ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்
சிவபெருமான் சிலை அல்லது படம் ஒன்று வைத்து பூக்களால் அலங்கரிக்கவும்.
மஹா சிவராத்திரி விரதத்தை முறைப்படி செய்கிறேன் என்று சங்கல்பம் எடுத்துக் கொள்ளுங்கள்.
சிவபெருமானின் சிலை அல்லது படத்தின்முன் ஐந்து பாரம்பரிய விளக்குகளை ஏற்றி வைக்கவும்
சிவலிங்க சிலைக்கு சுத்தம் செய்து பஞ்சாமிருத அபிஷேகம் செய்யுங்கள். {படம் மட்டும்