Dr. K. Kumar
ஆண்டு 1886, மே 1, அமெரிக்காவில் தொழிலாளர் வேலை நேரத்தை ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 8 மணி நேரமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. நாளொன்றுக்கு 12 முதல் 15 மணி நேரம் வரை உழைக்க வேண்டிய கட்டாயத்தால் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்த சமயம் அது.
முதலாளிகளால் தொழிலாளர்கள் சக்கையாகப் பிழியப்பட்டனர். இருந்தபோதிலும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கோ, நலனுக்கோ முக்கியத்துவம் தரப்படாமல் இருந்த ஒரு காலகட்டம் அது. எனவே அந்த போராட்டம் தீவிரம் கொண்டு வெகு வேகமாக நாடெங்கும் பரவியது.
சர்வதேச தொழிலாளர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 1 ஆம் தேதி உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.
இது சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் மே தினம் என்றும் அழைக்கப்படுகிறது. தொழிலாளர்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கும் அவர்களின் சாதனைகளைக் குறிக்கும் விதமாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை அடைவதில் தொழிலாளர்களின் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்துவதை இந்த நாள் நோக்கமாக கொண்டுள்ளது.
இந்தியாவில், முதல் முதலாக தொழிலாளர் தினம் அல்லது மே தினம் அன்றய மெட்ராஸில் (இப்போது சென்னை என அழைக்கப்படுகிறது) இந்துஸ்தானின் லேபர் கிசான் கட்சியால் மே 1, 1923 கொண்டாடப்பட்டது.
தொழிலாளர் தினத்தை குறிக்கும் செங்கொடி பயன்படுத்தப்பட்டதும் இதுவே முதல் முறையாகும்.இந்த இயக்கம் இந்தியா முழுவதும் வேகமாக பரவி, தமிழில் உழைப்பாளர் நாள், இந்தியில், காம்கார் தின், அந்தர் ராஷ்டிரிய ஷ்ராமிக் திவஸ் என்றும், மராத்தியில் காம்கார் திவஸ் என்றும், வங்காளத்தில் அந்தர் ஜாதிக் ஷ்ரமிக் திவஷ் என்றும் அறிய படுகிறது, ஆண்டு தோறும் மே முதல் நாள் கொண்டாட படுகிறது.
தற்போது சுமார் 100 நாடுகளில் மே 1 தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவானது செப்டம்பரின் முதல் திங்களன்று தொழிலாளர் தினத்தை கொண்டாடுகிறது.
உழைப்பின் பெருமையை உணர்வோம், தொழிலாளர்களை மதிப்போம், இந்த நல்ல நாளில் தொழிலாளர்கள் அனைவருக்கும் சைக்கிள் பியூர் நிறுவனத்தின் நல் வாழ்த்துக்கள்.