வலைப்பதிவு – அளிப்பது முனைவர் கி. குமார்
எல்லா யாகங்களையும் தர்மங்களையும்விட, மஹா சிவராத்திரி விரதம் மிகவும் விசேஷமானது என்று புராணம் கூறுகிறது.
சிவராத்திரி என்பதற்கு “சிவனுக்கு உகந்த இரவு” என்பது பொருள்.
பொதுவாக மாசி அல்லது மாக மாதத்தில் அமாவாசையில் இருந்து 14வது சதுர்த்தசியன்று வருவது மஹா சிவராத்திரியாகும்.
நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்று 5 வகை சிவராத்திரிகள் உண்டு.
மாதம் ஒரு சிவராத்திரி வந்தாலும் மாசி மாத மஹா சிவராத்திரியே தலை சிறந்த ஏற்றம் மிக்க சிவராத்திரி என்பது ஆன்றோர் வாக்கு.
ராத்திரி – சுப ராத்திரி – அன்னை அம்பாளின் அருள் ராத்திரி நவராத்திரி என்றால், அப்பன் சிவனின் அருள் ராத்திரி மஹா சிவராத்திரி என்றால் மிகையாகாது.
2023ம் ஆண்டு, பிப்ரவரி 18ந் தேதி, மஹா