வலைப் பதிவு: அளிப்பது முனைவர் திரு கி . குமார்
அன்பு நெஞ்சங்களே எங்கள் அருமை சைக்கிள் பியூர் இன்றய
மற்றும் நாளய வாடிக்கையாளர்களே
2023 ம் ஆண்டில் தை பிறந்து விட்டது
தை பிறந்தால்.. ..
வழி பிறக்குமா?
எவ்வளவோ ஆண்டுகளாக நாம் அனைவரும் கேட்டு கேட்டு பழகி மகிழ்ந்த வாக்கியம் இது :
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
இது ஒரு பழைய மொழி மட்டும் அல்ல, பல விதங்களில் பலருக்கும் பொருத்தமான வாக்கியம் என்றால் மிகை ஆகாது.
பசியை போக்கும் அன்னை தெய்வம் என்றால்.. உழவு செய்து அன்னம் படைக்கும் உழவன் கூட கடவுள் தான்.
எனவேதான் உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்கின்ற உன்னத விழாவாக தை மாதம் முதல் நாளில் உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இதுவே நாம் அனைவரும் வருடம் முழுவதும் காத்திருக்கும் தைப்பொங்கல் திருநாள்
உலகத்தின் உயிரூட்டும் சூரியனுக்கும், மற்ற சார்ந்த உயிர்களுக்கும் இயற்கைக்கும் நன்றி சொல்லும் ஒரு பண்டிகையாக (விழா என்று சொல்லுவது இன்னும் பொருத்தமாக இருக்கும்) கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் “சங்கரமணம் (சூரியன் ஒரு ராசியிலிரிந்து அடுத்த ராசிக்கு நகருவது என்று பொருள்) “மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். பிந்தய ஆறு மாதங்கள் தன் தென் திசை பயணத்திலிருந்த சூரியன் மகர ராசியில் பிரவேசித்து, தன் வடதிசை பயணத்தைத் தொடங்குகிறார். இதனை உத்ராயண புண்ணிய காலத்த